ஏப்ரல் 17 – அமெரிக்காவில் நேற்று தனது ‘கூகுள் கண்ணாடிகள்’ (Google Glasses) – ஐ சந்தைப்படுத்தி வெற்றி கண்ட கூகுள் நிறுவனம், தற்போது அதில் அடுத்த கட்ட முயற்சிக்கு தயாராகி வருகின்றது.
கண்ணாடிகளுக்குப் மாற்றாக அணியும் கான்டாக்ட் லென்ஸ்(Contact Lens) களில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ள கூகுள் நிறுவனம், இதற்கான காப்புரிமையை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வருகின்றது.
திறன்பேசிகளுடன் இணைந்து செயல்படும் வகையில் உருவாகிவரும் இந்த கான்டாக்ட் லென்ஸ்களில், சிறிய அளவிலான நுண்கேமராவும், அதிநவீன நுண் உணர்த்திகளும் (Sensors) பொருத்தப்பட்டுள்ளன. ஒளி, முகங்களின் அமைப்பு மற்றும் வண்ணங்களை அறியும் வகையில் உருவாகிவரும் இந்த கான்டாக்ட் லென்ஸ், பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று கூறப்படுகின்றது. மேலும், இந்த லென்ஸினை கண் சிமிட்டல்களின் மூலமாக இயக்கமுடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவராத நிலையில் தொழில்நுட்ப உலகில் இது மாபெரும் புரட்சியாக இருக்கும் என வல்லுனர்களால் கூறப்படுகின்றது.