Home கலை உலகம் என் விருதை பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிக்கிறேன் – நா.முத்துகுமார்

என் விருதை பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிக்கிறேன் – நா.முத்துகுமார்

768
0
SHARE
Ad

e5405854-d36f-49e4-b0e5-d84b20b90cf11சென்னை,ஏப்ரல் 17  – கடந்த ஆண்டுக்கான 61வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்க மீன்கள், வல்லினம் ஆகிய தமிழ்ப் படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளது.

தங்க மீன்கள் படத்திற்கு, சிறந்த படம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆகிய மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. இப்படத்தின் பாடல்களை எழுதிய நா.முத்துகுமார் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றுள்ளார்.

பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்துக்கொண்டுள்ள நா.முத்துகுமார், தனது முதல் தேசிய விருதான இவ்விருதை, இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து கூறிய நா.முத்துகுமார், சென்ற ஆண்டின்  சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது.

தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குநர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குநர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.