Home நாடு கிள்ளானில் இனக் கலவரமா? காவல் துறை மறுப்பு

கிள்ளானில் இனக் கலவரமா? காவல் துறை மறுப்பு

582
0
SHARE
Ad

Facebook-featureகிள்ளான், ஏப்ரல் 19 – கிள்ளானில் இரு இனங்களுக்கிடையே வன்முறை தாக்குதல் நடந்ததாக கூறப்பட்ட தகவல்களில்  உண்மையில்லை என்றும். சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்ட அந்த வதந்தி பொறுப்பற்றவர்களின் செயலென்றும் சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இத்தகைய தீய செயல்கள் நாட்டில் இனங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் என்றும் காவல் துறைத் தலைவர் கூறினார்.

கைத்தொலைபேசி குறுஞ்செய்திகள் மற்றும் முகநூலில் இச்செய்திகள் பரப்பப்பட்டிருந்தன. இதுகுறித்து காவல் துறை இதுவரை எவ்வித புகார்களயும் பெறவில்லை.

மோட்டார் சைக்கிளோட்டிகள் கிள்ளான், பண்டாமாரான், போர்ட்கிள்ளான் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். அங்கு செல்பவர்கள் தாக்கப்படுவார்கள் என்ற செய்தியும் பரப்பப்பட்டது

இது போன்ற செய்திகள் நாட்டின் நிலைத் தன்மைக்கு கேடு விளைவிக்கும்  என்றும், ஆகவே பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் உண்மையான நிலவரங்களைச் சரியான தரப்பினில் இருந்து பெறவேண்டும் என்றும் காவல் துறையின் தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்டிருக்கின்றது.