ஏப்ரல் 20 – நாடெங்கும் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,அமேதி தொகுதியைக் கூட ஒழுங்காக கவனிக்க முடியாத ராகுல் காந்தி எப்படி நாட்டை ஆள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சத்தீஷ்கார் மாநிலம் சுர்குஜாவில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் “நேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமேதி தொகுதியை தனது மகனுக்கு கொடுத்தார், தற்போது நான் அமேதிதொகுதியை எனது மகனிடம் கொடுத்துள்ளேன். அவனை பார்த்துக் கொள்ளுங்கள். அவர்நாட்டை ஆள வேண்டும்” என்று மக்களிடம் கூறினார்.
“நான் இப்போது ஒரு கேள்விஎழுப்ப விரும்புகிறேன், அமேதியின் தொகுதியின் வளர்ச்சியை கவனிக்க முடியாத ராகுல் காந்தியால் எப்படி இந்த நாட்டை ஆள முடியும்?”என்று கூறினார்.
சஞ்சய் பாருவின் புத்தகம் குறித்து மோடி விமர்சனம்
மேலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு எழுதிய புத்தகம் குறித்து பேசிய நரேந்திர மோடி, டெல்லியில் தாய்-மகன் அரசு நடைபெறுகிறது என்று அந்தப் புத்தகம் தெரிவித்துள்ளது என்றும் கூறினார்.
பிரதமஅலுவலகத்தையும் விமர்சித்த நரேந்திர மோடி இத்தகையவர்களிடம் இருந்து யார் நாட்டை காப்பாற்ற போகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.
இவர்களைபோன்றவர்களால் நாட்டை காப்பற்ற முடியாது என்றும் மோடி சாடினார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிவரும் ராகுல் காந்தியையும் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
“காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் எந்த என்னவோ செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போன்று பேசுகிறார். டெல்லியில் காங்கிரஸ்ஆட்சியின் போது என்ன நடந்தது?” என்றுத் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
“சில நாட்களுக்கு முன்னால் ராகுல் காந்தி இங்கு வந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசினார். தினசரி தொலைக்காட்சியை பார்த்திருப்பீர்கள். டெல்லியில் கற்பழிப்பு குறித்து செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ராகுல்காந்தியே நீங்கள் டெல்லியில் இருந்தீர்கள். உங்களது அரசே டெல்லியில் நடக்கிறது. உங்களது ஆட்சி நடைபெற்ற நிலையிலே பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்” என்றும் மோடி நினைவுபடுத்தினார்.