Home உலகம் மூழ்கிய தென் கொரிய பயணப் படகை இளம் பெண் மாலுமி இயக்கியதாக அதிர்ச்சித் தகவல்!

மூழ்கிய தென் கொரிய பயணப் படகை இளம் பெண் மாலுமி இயக்கியதாக அதிர்ச்சித் தகவல்!

453
0
SHARE
Ad

South Korea ferryசியோல்,ஏப்ரல் 21 – 476 பள்ளி மாணவர்களுடன் சென்ற தென் கொரியாவின் பயணப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 58 பயணிகள் பலியாகியுள்ள நிலையில் காணாமல் போன பலரைத் தேடும் பணி நடந்து வருகின்றது.

இதற்கிடையே, பயணப் படகின் மாலுமி மற்றும் 2 உதவி மாலுமிகளை நீதிமன்றம் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து மாலுமி லீ ஜூன் ஜியோக்கையும் அவரது உதவியாளர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் படகை  சம்பவத்தின் போது இளம்பெண் உதவி மாலுமி செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

அப்பெண் மாலுமி, எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் முதல் முறையாக படகைச்  செலுத்தியுள்ளார். அப்பொழுது அவர் படகை  வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகமாக ஓட்டியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அரசு வக்கீல் கூறுகையில், “பார்க் ஹகில்ம்ஸ்மன் என்ற 25 வயது இளம் பெண் படகை  ஓட்டியுள்ளார். அவருக்கு அப்பணியில் வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே முன் அனுபவம் இருந்துள்ளது. முன்னதாக அவர் படகு  எதையும் ஓட்டியதில்லை” என்று கூறியுள்ளார்.

படகு  வழக்கத்திற்கு மாறாக வேகமாக இயக்கப்பட்டதை மற்றொரு மாலுமியான சோ ஜூன் கி ஒப்புக்கொண்டுள்ளார்.

பெண் மாலுமி படகை  ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளில் இயக்கப் போராடிய போது, மூத்த மாலுமிகள் பயணிகளுக்கு முன்னதாக தப்பித்து ஓட்டிவிட்டனர் என்றும், மூத்த மாலுமிகள் ஏன் அபெண் மாலுமியை கொண்டு படகை  இயக்கினர் என்பது குறித்தும் சரியான தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.