Home தொழில் நுட்பம் 500 மில்லியன் பயனாளர்களை தாண்டியது வாட்ஸ் அப்!

500 மில்லியன் பயனாளர்களை தாண்டியது வாட்ஸ் அப்!

722
0
SHARE
Ad

whatsupபுதுடெல்லி, ஏப்ரல் 23 – வாட்ஸ் அப் என்னும் செல்பேசி “அப்ளிகேஷன்” புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதன்  பயனாளர்கள் இப்போது 500 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஜான் கோம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளாவது, உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள்.

உலகம் முழுவதும் அரை பில்லியன் மக்கள் இப்போது வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த சில மாதங்களாக பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ் அப்பின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது.

மேலும் எங்களது பயன்பாட்டாளர்கள் தினமும்  700 மில்லியன் புகைப்படங்கள், 100 மில்லியன் காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாட்ஸ் அப் பயனீட்டாளர்கள் 200 மில்லியனை நெருங்கி இருந்தது. தற்போது ஒராண்டிற்கு குறைவான நாட்களில் இருமடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் என்னும் செயலியின் மூலம் அதன் பயனாளர்கள் இலவசமாக தங்கள் செய்திகளை பகிர்ந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.