Home கலை உலகம் நான் ஆணாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருப்பேன் – ஸ்ருதி ஹாஸன்

நான் ஆணாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருப்பேன் – ஸ்ருதி ஹாஸன்

686
0
SHARE
Ad

surithiஹைதராபாத், ஏப்ரல் 24 –  நான் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருப்பேன் என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாஸன், அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடித்த “ரேஸ் குர்ரம்” என்ற தெலுங்கு படம் கடந்த 11-ஆம் தேதி வெளியானது.

படம் ஆந்திரா, பிற மாநிலங்கள் தவிர வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளி வருகிறது. படம் நன்றாக ஓடுவதால் ஸ்ருதி மகிழ்ச்சியில் உள்ளார்.

“ரேஸ் குர்ரம்” படத்தில் ஸ்ருதி ஹாஸன் லுங்கி டான்ஸ் ஆடியுள்ளார். இந்த டான்ஸுக்கு ஆந்திராவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

இதை பற்றி ஸ்ருதி ஹாஸன் கூறியதாவது, நான் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருந்திருப்பேன்.

ஆனால் பெண்ணாக பிறந்ததால் லுங்கி கட்ட முடியவில்லை. எனக்கு லுங்கி தான் மிகவும் பிடித்த உடை. லுங்கி கட்ட வேண்டும் என்ற என் ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது என்றார் ஸ்ருதி.