Home India Elections 2014 கெஜ்ரிவால் சொத்து ரூ. 2.14 கோடி – வேட்புமனுவில் தகவல்

கெஜ்ரிவால் சொத்து ரூ. 2.14 கோடி – வேட்புமனுவில் தகவல்

672
0
SHARE
Ad

kagirivalவாரணாசி, ஏப்ரல் 24 – வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில்  ஆம்ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது வேட்புமனுவை  தாக்கல் செய்தார்.

அதில் தனக்கும், தன் மனைவிக்கும் உள்ள அசையும்  மற்றும் அசையா சொத்தின் மதிப்பு ரூ.2.14 கோடி (மலேசியா – வெள்ளி 10,500,00) என்று  குறிப்பிட்டுள்ளார். இவருக்கு ரூ.55 லட்சம் மற்றும் ரூ.37 லட்சம்  மதிப்பில் 2 அடுக்குமாடி குடியிருப்பு வீடு காஜியாபாத்திலும்,  சிவானியிலும் உள்ளன.

இவரது மனைவி சுனிதாவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள 2,244 சதுரடி  அடுக்குமாடி வீடு கோர்கானில் உள்ளது. கெஜ்ரிவாலிடம் உள்ள  அசையும் சொத்து மதிப்பு ரூ.4,25,085, இவரது மனைவியிடம் உள்ள  300 கிராம் நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்து மதிப்பு ரூ.17,41,583 ஆகும்.

#TamilSchoolmychoice

கையிருப்பாக தன்னிடம் ரூ.15,000, மனைவியிடம் ரூ.10,000  இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் மீது 6 வழக்குகள் நிலுவையில்  உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.