Home நாடு ஒபாமா மலேசிய வருகை – நஜிப்பின் ட்விட்டர் படங்கள்!

ஒபாமா மலேசிய வருகை – நஜிப்பின் ட்விட்டர் படங்கள்!

457
0
SHARE
Ad

BmKJeITCEAAErDp

கோலாலம்பூர், ஏப்ரல் 27 – ஒபாமாவின் சரித்திரப் பிரசித்தி பெற்ற வருகையினால் பிரதமர் நஜிப் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்பது மட்டும் திண்ணம்.

அன்வார் வழக்கினால் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள், காஜாங் இடைத் தேர்தலில் தோல்வி, எல்லாவற்றுக்கும் மேலாக காணாமல் போன எம்.எச். 370 விவகாரத்தில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவு – இப்படியாக பல்வேறு விவகாரங்களால் எப்போதும் இல்லாத அளவுக்கு  நஜிப்பின் செல்வாக்கு இறங்கு முகமாக இருக்கின்றது.

#TamilSchoolmychoice

இதனால், அமெரிக்க அதிபரின் வருகையின் மூலம் தனது செல்வாக்கு உயரும் என்பது பிரதமர் நஜிப்பின் அரசியல் கணக்காகும்.

மலேசிய அரசாங்கத்தின் அனைத்து அங்கங்களும் தற்போது ஒபாமா வருகைக்காக முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றன.

நஜிப் தனது ட்விட்டர் பக்கங்களில் மகிழ்ச்சியோடு வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை இங்கே காணலாம்.

BmJQ62mCEAAMGmp