Home நாடு ஒபாமாவுடன் நஜிப் பிரத்தியேகப் புகைப்படம்

ஒபாமாவுடன் நஜிப் பிரத்தியேகப் புகைப்படம்

545
0
SHARE
Ad

Obama Najib 300 x 400கோலாலம்பூர், ஏப்ரல் 27 – நேற்று மலேசியாவுக்கு அதிகாரபூர்வ வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

புத்ரா ஜெயாவில் பேச்சு வார்த்தைகள் நடத்திய அவர்கள் பின்னர் சைபர் ஜெயாவிலுள்ள புத்தாக்க, படைப்பாக மையம் ஒன்றை இணைந்து திறந்து வைத்தனர்.

இதற்கிடையில் ஒபாமாவுடன் தான் பிரத்தியேகமாக தனது திறன் பேசியில் (Smart phone) எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நஜிப் தனது ட்விட்டர் அகப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இப்போதெல்லாம், பிரபலமானவர்களைச் சந்தித்தால், அவர்களுடன் “செல்ஃபி – Selfie” எனப்படும் தங்களின் சொந்தப் புகைப்படத்தை திறன்பேசிகளின் வழியாக தாங்களே எடுத்துக் கொண்டு, அதனை நட்பு ஊடகங்களில் வெளியிடும் கலாச்சாரம் பிரபலமாக பரவி வருகின்றது.

நாட்டின் பிரதமராக இருந்தாலும், நஜிப் கூட அந்தக் கலாச்சாரத்திற்கு விதிவிலக்கல்ல!