Home இந்தியா காஷ்மீர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு – 10 பேர் காயம்

காஷ்மீர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு – 10 பேர் காயம்

574
0
SHARE
Ad

ஸ்ரீநகர், ஏப்ரல் 27 – இதுவரை பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் முதல் முறையாக ஒரு கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கின்றது.

Farook Abdullah 440 x 215தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாஏற்பாட்டில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

காலை 11.45 மணி அளவில் அந்த இடத்தில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பினால் 10 பேர் காயம் அடைந்தனர்.  ஆனாலும்திட்டமிட்டப்படி பொதுக்கூட்டம் நடைபெற்றது

தேசிய மாநாட்டு கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அங்கு பருக் அப்துல்லாதீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக ஸ்ரீநகரின் ஒரு பகுதியில் பருக் அப்துல்லா கலந்து கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரகூட்டத்தில் பலத்த சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று நாங்கள் ஆய்வுசெய்து வருகிறோம் என்று அம்மாநில காவல்துறை தகவல் தொடர்பாளர்  தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மர்ம நபர் ஒருவர் கையெறி குண்டைவீசியதாக தெரிவித்துள்ளனர்.