Home இந்தியா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு 5-வது வெற்றி – பெங்களூரை வீழ்த்தியது!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு 5-வது வெற்றி – பெங்களூரை வீழ்த்தியது!

579
0
SHARE
Ad

iplதுபாய், ஏப்ரல் 29 – ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி 5-வது வெற்றியை தனதாக்கியது.

7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று இரவு நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்-ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.ipll

முதலில் ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

5-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பெங்களூர் அணிக்கு 3-வது தோல்வி இதுவாகும்.iipl