இதற்கு பிறகு அவர் ஜோதிகா நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக தகவல் பரவியது. இந்த படம் மூலம் ஜோதிகா மீண்டும் நடிக்க போவதாகவும் கோலிவுட்டில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து பாண்டிராஜ் கூறுகையில்,இணையதளத்தில் இது தொடர்பான செய்திகள் படித்தேன். ஜோதிகாவை நான் சந்தித்ததாகவும் அவரிடம் கதையை சொன்னதாகவும்
தகவல் வந்துள்ளது.
ஜோதிகாவுக்காக கதை உள்ளது. அவரிடம் கதை சொல்ல விரும்புகிறேன். ஆனால் இதுவரை அவரை நான் சந்திக்கவில்லை. இதுதான் உண்மை. அவரை சந்தித்து கதை சொல்ல எண்ணியுள்ளேன் என்றார் பாண்டிராஜ்.
சூர்யாவை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் ஜோதிகா. பல இயக்குனர்கள் அவரை நடிக்க அழைத்தபோதும் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.