Home இந்தியா மோடி பிரதமரானால் நாடு அழிந்து விடும் – மம்தா பானர்ஜி

மோடி பிரதமரானால் நாடு அழிந்து விடும் – மம்தா பானர்ஜி

704
0
SHARE
Ad

MAMATA_கொல்கத்தா, ஏப்ரல் 29 – மோடி பிரதமரானால் நாடு அழிந்து விடும் என்று, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசும் போது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை நேரடியாக தாக்கி பேசினார்.

கம்யூனிஸ்ட்டுகள் 35 ஆண்டுகளாக நாசப்படுத்தியதை விட, மம்தா 35 மாதங்களில் மேற்கு வங்காளத்தை நாசப்படுத்தியதாக மோடி கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

மேலும்,ஓட்டு வங்கி அரசியலுக்காக வங்காள தேசத்தினரை சிகப்பு கம்பளம் விரித்து மம்தா பானர்ஜி வரவேற்கிறார். இந்த ஓட்டு வங்கி அரசியல் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை இருளடைய செய்து விட்டது.

சகோதர, சகோதரிகளே. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மே 16-ஆம் தேதிக்குப் பிறகு வங்காளதேசத்தினர் தங்கள் பெட்டி, படுக்கையுடன் எல்லையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பதை இங்கிருந்தபடியே நான் எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் மோடி கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோடியை கடுமையாக தாக்கி கருத்து வெளியிட்டுள்ளார் மம்தா பானர்ஜி. அதில் அவர் கூறியிருப்பதாவது, மேற்கு வங்காள மக்களுக்கும் வங்காள தேசத்தினருக்கும் இடையில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் மோடி பேசியிருக்கிறார்.Narendra-Modi101

ஜாதி, மொழி அடிப்படையிலான தனது பாணி அரசியலை மேற்கு வங்காளத்திலும் நுழைக்க அவர் முயற்சிக்கிறார். குஜராத்தில் ரத்த ஆறு பாய்வதற்கு காரணமாக இருந்த மோடி, மேற்கு வங்காளத்திலும் ரத்த சமுத்திரம் உருவாக வேண்டும் என்று விரும்புகிறாரா?

நாட்டை தலைமை ஏற்று வழிநடத்துபவர்கள் எல்லா சமூகத்தினரிடமும் அன்பு செலுத்தி, அவர்களை அரவணைக்க வேண்டும்.

தற்போது நாட்டின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருப்பவர் பிரதமராகி விட்டால், நாடு இருளடைந்த காலத்தை நோக்கி சென்று விடும். அவரது கைக்கு அதிகாரம் போனால் நாடு அழிந்து விடும் என தனது டிவிட்டர் பக்கத்தில் மம்தா பானர்ஜி குற்ப்பிட்டுள்ளார்.