Home நாடு புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் மசீச போட்டியிடும் –லியாவ் தியோங் லாய்

புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் மசீச போட்டியிடும் –லியாவ் தியோங் லாய்

532
0
SHARE
Ad

liow-tiong-lai5-june7_400_267_100கோலாலம்பூர், ஏப்ரல் 30 – கர்ப்பால் சிங்கின் மரணத்தால் காலியாகியுள்ள புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் மசீச மீண்டும் போட்டியிடும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியோங் லாய் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த இடைத் தேர்தலில் மசீச போட்டியிடக் கூடாது என பல தரப்புகள் ஆலோசனைகள் கூறிய போதிலும் கட்சியின் முடிவு மாறாது என்று லியாவ் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கர்ப்பால் சிங் கார் விபத்து ஒன்றில் அகால மரணமுற்றதை அடுத்து இங்கு வருகிற மே 25ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் கர்ப்பால் சிங் போட்டியிட்டு மசீச வேட்பாளரை விட 40 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இங்கு மசீச மீண்டும் போட்டியிட்டால் அது படுதோல்வியடையக் கூடும் என்று பல அரசியல் கணிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியலை மசீச தம்மிடம் தந்துள்ளதாக லியாவ் கூறினார். ஆனால், இறுதி வேட்பாளரை பின்னர் அறிவிப்பதாக அவர் சொன்னார்.