Home நாடு மேலும் இன்னொரு தவணைக்கு சிலாங்கூர் மந்திரி பெசாராக நீடிக்க விரும்பவில்லை – காலிட்

மேலும் இன்னொரு தவணைக்கு சிலாங்கூர் மந்திரி பெசாராக நீடிக்க விரும்பவில்லை – காலிட்

542
0
SHARE
Ad

khalid_ibrahim_-_the_msian_timesபெட்டாலிங் ஜெயா, மே 2 – மேலும் இன்னொரு தவணைக்கு சிலாங்கூர் மந்திரி பெசாராக தனது பதவியில் நீடிக்க  விரும்பவில்லை என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் நேற்று கூறினார்.

ஆனால், மக்கள் கூட்டணி தலைமைத்துவம் கொடுத்த நெருக்கடியால் இந்த முடிவைத் தான் எடுக்கவில்லை என்றும் இது என்னுடைய சொந்த முடிவு என்றும், முன்கூட்டியே இந்த முடிவை எடுத்து விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

அரசியல் கட்சியிலும் நாட்டிலும் இளையோர் தங்கள் தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்த நாம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.

#TamilSchoolmychoice

எம்டியூசி ஏற்பாட்டில் இங்கு நடத்த தொழிலாளர் தின பேரணியில்  கலந்து கொண்ட பின் அவர் நிருபர்களிடம் பேசினார்.

“மக்களுக்கு நல்ல முறையில் சேவையாற்றிய மனிதராகவே நான் நினைவு கூரப்பட வேண்டும் என விரும்புகின்றேன்” என்றும் காலிட் தெரிவித்தார்.

எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் நடப்பு தேசியத் துணைத் தலைவர் அஸ்மின் அலியை எதிர்த்து காலிட் இப்ராகிம் போட்டியில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.