கோலாலம்பூர், மே 2 – இன்று முதல் அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கிய மலேசியாவின் 2வது விமான நிலையத்தில் முதலாவது விமானமாக ஏர் மலிண்டோ விமானம் ஒன்று தரையிறங்கியது.
(இன்று அதிகாலை 2வது விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல் விமானத்தை ஆர்வத்தோடு பார்க்கும் பணியாளர்கள், பார்வையாளர்கள்)
மலிவு விலை விமானங்களுக்காக பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட இந்த கேஎல்ஐஏ 2 (KLIA 2) என்ற விமான நிலையம் உலகிலேயே பெரியதாக வர்ணிக்கப்படுகின்றது.
இன்று முதல் இந்த 2வது விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதை அடுத்து, எதிர்வரும் 9ஆம் தேதி முதல் எல்சிசிடி (LCCT) எனப்படும் பழைய மலிவு விலை விமான நிலையம் மூடப்படும்.
முதலில் நாங்கள் இடம் மாற மாட்டோம் என்றும் 2வது விமான நிலையம் பாதுகாப்பற்றது என்றும் கூறிய ஏர் ஆசியா விமான நிறுவனமும் தற்போது புதிய விமான நிலையத்திற்கு மாறுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது
(இன்று அதிகாலை 2வது விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல் விமானமான ஏர் மலிண்டோ விமானத்தை நீர் பாய்ச்சி வரவேற்கும் விமானப் பணியாளர்கள்)