Home நாடு எம்எச் 370: ஆழ்கடல் தேடுதல் நடவடிக்கைக்கு 12 மாத காலம் பிடிக்கும்

எம்எச் 370: ஆழ்கடல் தேடுதல் நடவடிக்கைக்கு 12 மாத காலம் பிடிக்கும்

364
0
SHARE
Ad

Search continues for Malaysian Airlines Flight MH370பெட்டாலிங்ஜெயா, மே 2 – மாஸ் நிறுவனத்தின் காணாமல் போன விமானம் எம்எச் 370ஐ இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் வெகு ஆழத்தில் தேடும் பணி புதியதொரு கட்டத்தில் அடியெடுத்துவைத்துள்ளது என கூட்டு நிறுவன ஒருங்கிணைப்பு மையத்தின் (ஜேஏசிசி) தலைவர்எங்கஸ் ஹுஸ்டன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அவ்விமானத்தை ஆழ்கடலில் தேடுவதிலுள்ள சவால்கள் குறித்து பல்வேறு  நிறுவனங்கள் ஆய்வுகள் செய்து வருகின்றன.

புதிய கட்டத்தை அடைந்துள்ள அந்தஆழ்கடல்தேடுதல்  நடவடிக்கைக்குபன்னிரண்டுமாதங்கள் வரை ஆகலாம்எனஹுஸ்டன் இன்று வெள்ளியன்று நடந்த  செய்தியாளர்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த எம்எச் 370 விமானத்தை கண்டு பிடிப்பதில் மலேசியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகள் முழு அர்ப்பணிப்புடன் உள்ளோம். திறன்மிக்க தேடுதல் நடவடிக்கையின் மூலம் முடிவில் அவ்விமானத்தை கண்டுபிடிப்போம் எனும்நம்பிக்கை தமக்கு உள்ளது என்றும் எங்கஸ் கூறியுள்ளார்.

சீனா, ஆஸ்திரேலியா மலேசியா ஆகிய நாடுகளுடனான ஒரு முத்தரப்புகலந்தாய்வுக்காக நாளை ஞாயிறன்று  தாம் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவுக்குசெல்லவுள்ளதாக இடைக்காலப் போக்குவரத்துத்  துறை அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹுசேன்கூறியுள்ளார்.

தேடுதல் நடவடிக்கைக்கான தளவாடங்கள் அனுப்புதல், பயணிகளின்குடும்பத்தாருடனான தொடர்பு ஆகியவை குறித்து அடுத்து மேற்கொள்ளப்படவிருக்கும் அணுகுமுறைகளை கலந்து பேசவிருக்கின்றோம். அது தொடர்பில் உலகம் முழுவதிலுமிருந்து வரும் நிபுணத்துவ, தொழில்நுட்ப ஆலோசனைகள் ஆராயப்படும் எனஹிஷாமுடின் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

அந்த விமானத்தைத் தேடும் பணி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது எனும் முழுமையான  நம்பிக்கைதமக்குஉள்ளது. எனினும்அப்பணியைமேற்கொள்வதில்பெரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார் ஹிஷாமுடின்.

இதற்கிடையில் எம்எச் 370இன் உடைந்த பாகங்களை வங்காள விரிகுடாவில் கண்டுள்ளதாக ஆஸ்திரேலியக் கடல்ஆராய்ச்சி நிறுவனம்  ஜியோ ரிசோனன்ஸ் கூறிவருகிறது.

இது தொடர்பாக பேசிய ஹிஷாமுடின் “பொருத்தமானகப்பல்கள்அப்பகுதியில் தேடுதல் பணியை மேற்கொண்டு அப்பொருட்களை அடையாளம் காண்பதன் மூலம் மட்டுமேகுறிப்பிட்ட அத்தகவலை உறுதி செய்ய முடியும். அத்தேடுதல் பணியை நாம் திசை திருப்பி மேற்கொள்வதன் மூலம் நமதுதேடுதல் பணியிலிருந்து  நமதுகவனம்திசைதிரும்பும்என்பதையும் நாம் கூறியாக வேண்டும்” என்று கூறினார்.

இவ்வாறு அப்படியே அங்கு தேடுதல் பணியை மேற்கொண்டு அதன் விளைவு எதிர்மறையானால்நேர விரயத்திற்கு யார் பொறுப்பாவது? வங்காள விரிகுடாவுக்கு கூடுதல்கப்பல்கள் சென்று விட்டால் தற்போது நிர்ணயிக்கப்பட்ட கடல் பகுதியில்தேடுதல்பணி பாதிக்கும்” என்றும்  ஹிஷாமுடின் கூறியுள்ளார்.