பாக்தாத், மே 3 – ஈராக்கில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது.
தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தோடு பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய தீவிரவாதிகளையும் மீறி, சுமார் 60 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ள போதிலும், முதல்கட்ட முடிவுகள் தெரிய 2 வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் வெற்றி பற்றி பிரதமர் நூரி அல்-மாலிகி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேர்தலில் எங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. ஆனால், எந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கிறது என்பதை அறிய ஆவலாக உள்ளோம்” என்றார்.
அதேநேரம், மாலிகியின் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்காது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.