Home உலகம் ஆப்கானிஸ்தானில் கடும் நிலச்சரிவு: 2000 பேர் மாயம்!

ஆப்கானிஸ்தானில் கடும் நிலச்சரிவு: 2000 பேர் மாயம்!

392
0
SHARE
Ad

5282aa3d-dda4-481e-9ad3-8a86d04159ce_S_secvpfகாபூல், மே 3 – ஆப்கானிஸ்தானின் பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், நேற்று மதியம் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த 2000 பேரை காணவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பதக்சான் மாகாண கவர்னர் ஷா வலியுல்லா அதீப் கூறியதாவது:-
“கடுமையான மழை காரணமாக மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தன. அதில் வசித்த 2000-க்கும் அதிகமானோரை காணவில்லை. அந்த கிராமத்தில், 75 சதவீத வீடுகள் புதைந்து போகின.”

“மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போதுமான கருவிகள் மற்றும் மண் தோண்டும் இயந்திரங்கள் இல்லாததால் அவர்களால் பணியை வேகமாகச் செய்ய முடியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள மாகாணம், இந்து குஷ் மற்றும் பாமீர் மலைத்தொடரிலும், சீனாவின் எல்லையிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.