வாஷிங்டன், மே 3 – அமெரிக்காவின் இல்லினோயிஸ் மாகாணத்தின் பெடரல் நீதிபதியாக இந்தியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர், இந்திய வம்சாவளி வழக்கறிஞர் மணீஷ் ஷா. இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் இல்லினோயிஸ் மாகாணத்தின் வட மாவட்டத்தில் அரசு துணை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ள இவரை, இல்லினோயிஸ் மாகாண பெடரல் நீதிபதியாக நியமிக்க அமெரிக்காவின் செனட் சபையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் மணீஷ் ஷாவுக்கு ஆதரவாக 95 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் இல்லினோயிஸ் மாகாணத்தின் பெடரல் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இல்லினோயிசில், பெடரல் நீதிபதியாக தெற்கு ஆசியாவை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது குறித்து இந்திய-அமெரிக்க பார் கவுன்சில் தலைவர் தேஜாஸ் ஷா கூறுகையில், “பெடரல் நீதிபதியாக மணீஷ் ஷாவின் நியமனம், இந்தியர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவம் ஆகும்” என்று கூறியுள்ளார்.