Home தொழில் நுட்பம் லுக்ஸ் வ்யூவ் டெக்னாலஜி நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்!

லுக்ஸ் வ்யூவ் டெக்னாலஜி நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்!

472
0
SHARE
Ad

BN-CM359_apple_G_20140423035031மே 3 – ஆப்பிள் நிறுவனம், சிறிய முதலீட்டில் இயங்கும் லுக்ஸ் வ்யூவ் டெக்னாலஜி ( LuxVue Technology) எனும் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக தொழில்நுட்பத் தகவல்களைத் தரும் வலைத்தளங்கள் ஆருடம் கூறுகின்றன.      

லுக்ஸ் வ்யூவ் டெக்னோலஜி நிறுவனம்,  micro-LED தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான எல்இடி திரைகளை உருவாக்கி வருகின்றது. இந்த தொழில்நுட்பத்தில் மிகக் குறைந்த மின்சக்தியின் மூலம் அதிக ஒளிர்வு தன்மை கொண்ட திரைகளை உருவாக்க முடியும்.

லுக்ஸ் வ்யூவ் டெக்னாலஜி வாங்கப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும்,  ஆப்பிளின் செய்தித் தொடர்பாளர், அந்நிறுவனம் காலத்திற்கு ஏற்றாற்போல் சிறிய நிறுவனங்களை வாங்குவது வாடிக்கை என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த காலங்களில் ஆப்பிளின் ரெட்டினா திரை (Retina Display) பெரிய வரவேற்பை பெற்றாலும், கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களின் புதிய தயாரிப்பு காரணமாக அதன் மதிப்பு சரியத்தொடங்கியது. அதனால் ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய தொழில்நுட்பத்தில் திரைகளை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.