Home கலை உலகம் தெலுங்கிலும் படவாய்ப்பை இழந்தார் அஞ்சலி!

தெலுங்கிலும் படவாய்ப்பை இழந்தார் அஞ்சலி!

740
0
SHARE
Ad

anjali-at-malabar-gold-showroom-stills010 (1)சென்னை, மே 7 – தெலுங்கு படவாய்ப்புகளையும் அஞ்சலி இழந்தார். சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து டோலிவுட் படங்களில் நடிக்க சென்ற அஞ்சலி தற்போது கன்னட படங்களில் நடிக்கிறார்.

தன்னை சிறுவயது முதல் எடுத்து வளர்த்த சித்தியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. அதேபோல் இயக்குனர் களஞ்சியத்துடனும் மோதல் உண்டானது.

இதையடுத்து, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார் அஞ்சலி. ஆந்திரா சென்ற அவர், தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

#TamilSchoolmychoice

கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் காணாமல்போனார். அவர் இருப்பிடத்தை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கண்டுபிடித்து தங்கள் படங்களில் நடிக்க கேட்டனர். ஆனால் ஒப்புக்கொள்ளாமல் காலம் கடத்தி வந்தார். அவ்வப்போது எங்கிருக்கிறேன் என்றுகூட சொல்லாமல் நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பிவிட்டு அமைதியாக விடுவார்.

இதனால் தெலுங்கு வாய்ப்புகளையும் அஞ்சலி இழந்தார். இப்போது டோலிவுட்டில் அவர் வாய்ப்புகளை இழந்துவிட்டார். இப்படியே போனால் சினிமாவிலிருந்து ஒதுக்கிவிடுவார்கள் என்பதால் ஒரு முடிவு எடுத்தார்.

வட இந்திய நடிகைகள் வாய்ப்பு இழக்கும்போது போஜ்புரி சினிமாவுக்கு போய்விடுவார்கள். அதுபோலவே தென்னிந்திய நடிகைகள் வாய்ப்பு இழந்தால் செல்வது, கன்னட சினிமாவுக்குதான். இப்போது அஞ்சலியும் அங்குதான் சென்றிருக்கிறார். தற்போது கன்னடத்தில் புனித் ராஜ்குமார் இயக்கும் ரணவிக்ரமா என்ற படத்தில் நடிக்கிறார்.