Home கலை உலகம் சூர்யாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை!

சூர்யாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை!

521
0
SHARE
Ad

surya_jyothikaசென்னை, மே 8 – படப்பிடிப்பின்போது காலில் அடிபட்ட சூர்யாவுக்கு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். இதில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கோவாவில் கடந்த வாரம் நடந்தது.

சண்டை காட்சியொன்றில் சூர்யா நடித்தபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடிபட்ட இடத்தில் வலி குணமாகாததால் இன்னும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

suriyaஅங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் ஜோதிகாவும் சென்றிருக்கிறார். 4 வாரங்களுக்கு பிறகு ஜூன் மாதம் அவர் திரும்பி வருகிறார்.

#TamilSchoolmychoice

இது பற்றி பட குழுவை சேர்ந்தவர்கள் கூறும்போது, “90 சதவீதம் படம் முடிந்தது. கடைசி நாள் படப்பிடிப்பின்போதுதான் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஓட்டு பதிவின்போது கூட அவர் ஊன்றுகோல் ஒன்றை வைத்துக் கொண்டு வந்துதான் ஓட்டளித்தார். இன்னும் முழுமையாக அவர் குணமடைய வேண்டியுள்ளது” என்றனர்.