Home நாடு ஆஸ்திரேலிய செனட்டர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

ஆஸ்திரேலிய செனட்டர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

933
0
SHARE
Ad

senatorகோலாலம்பூர், பிப்.16- ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் (படம்) கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) தடுத்து வைக்கப்பட்டார். ‘நாட்டின் நலன்களுக்கு  எதிரானவர்’ எனக் கூறப்பட்ட பின்னர் அவர் இப்போது திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று அதிகாலையில் கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையம் வந்தடைந்த அவர், கடந்த சில மணி நேரங்களாக குடிநுழைவுத் துறையின் தடுப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளார்.

“நான் இங்கு கைதியாக இருக்கிறேன்,” என செனபோன் ஆஸ்திரேலியாவின் சண்டே மெயில் நாளேட்டிடம் கூறினார். பெண்கள் நிறைந்துள்ள தடுப்புப் பகுதியில் நான் வைக்கப்பட்டுள்ளேன். நான் நாட்டின் எதிரி என அவர்கள் என்னிடம் கூறினர். அடுத்த விமானத்தில் என்னை இங்கிருந்து வெளியேற்றவும் திருப்பி அனுப்பவும் அவர்கள் முயற்சி செய்கின்றனர்.”

#TamilSchoolmychoice

தொடர்ந்து தொலைபேசியில் யாரையும் அழைப்பதற்குத் தாம் அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த செனட்டர் சொன்னார். விசாரணை அறையில் தம்மை யாரும் கவனிக்காத நேரத்தில் தாம் அந்த ஆஸ்திரேலிய பத்திரிக்கையுடன் பேச முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் விவகாரங்கள் மீது செனபோன், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்தல் ஆணைய அதிகாரிகளையும் பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸையும் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர் ஒர் அனைத்துலகப் பார்வையாளராக கடந்த ஆண்டு நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் கலந்து கொண்டார். தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கட்டுப்படுத்த முயன்ற கலகத்  தடுப்புப் போலீசார் வீசிய கண்ணீர் புகைக் குண்டுகளினால் அவரும் பாதிக்கப்பட்டார்.