Home கலை உலகம் கார் மோதி ஒருவர் பலியான வழக்கு: சல்மான் கானுக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள்...

கார் மோதி ஒருவர் பலியான வழக்கு: சல்மான் கானுக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை!

528
0
SHARE
Ad

salman_storysize_மும்பை, மே 8 – மும்பையில் போதையில் காரை ஓட்டிச் சென்று ஒருவர் மீது ஏற்றிக் கொன்றதாக நடிகர் சல்மான்கான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக 3 பேர் வழக்கில் சாட்சியம் அளித்தனர்.

இது நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அதிகாலை சல்மான் கான் ஓட்டிச் சென்ற கார் பாந்த்ராவில் அமெரிக்கன் பேக்கரி அருகில் இருக்கும் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் ஒருவர் பலியானார். அந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.

#TamilSchoolmychoice

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

சல்மான்கான் குடித்திருந்தார்

ஆனால் காரில் இருந்த சல்மான்கானின் பாதுகாப்பு போலீஸ்காரர் அளித்த சாட்சியத்தில், “விபத்து நடந்தபோது சல்மான்கான் அதிகளவில் மது குடித்திருந்தார். காரை ஓட்ட வேண்டாம் என்று நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார்” என்று கூறியிருந்தார்.

அவர் இப்போது இறந்து விட்டார். இந்த சாட்சியத்தின் காரணமாக சல்மான்கான் மீது கொலைக்கு நிகரான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மேலும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்து செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்த புதிய குற்றச்சாட்டை எதிர்த்து சல்மான்கான் தாக்கல் செய்த மனுக்களை முதலில் மும்பை உயர் நீதிமன்றமும் பின்னர் உச்ச நீதிமன்றமும் நிராகரித்தன.

சல்மான் கான் வழக்கில் ஆஜர்

இதைத் தொடர்ந்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி விசாரணை தொடங்கியது. அப்போது வழக்கின் முதல் சாட்சியாக சாம்பா கவுடா என்பவர் சாட்சியம் அளித்தார். நேற்று முன்தினம் சல்மான் கான் ஆஜரானார்.

இவ்வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பேக்கரி தொழிலாளர்கள் மன்னு கான், முகமது கலீம் இக்பால் பட்டான், முஸ்லிம் ஷேக் ஆகிய மூவரும் நீதிபதி தேஷ்பாண்டே முன்னிலையில் சல்மான் கானை அடையாளம் காட்டினர்.

சல்மான் கான்தான் காரை ஓட்டியதாகவும் விபத்து நடந்ததும் டிரைவர் இருக்கையில் இருந்து இறங்கி ஓடினார் என்றும் அப்போது அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் ஓடும் போது கீழே விழுந்துவிட்டதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சல்மானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.