ஜெனீவா, மே 9 – உலக நகரங்கள் பலவற்றில் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மனித குளத்தின் நாகரீக வளர்ச்சிக்கேற்ப, இயற்கை சூழலும் அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றது. அதற்கு சான்றாக உலக சுகாதார அமைப்பு
உலகெங்கிலும் உள்ள 91 நாடுகளைச் சேர்ந்த 1600 நகரங்களில் காற்றின் தரம் குறித்து மேற்கொண்ட ஆய்வில், அதன் தரம் குறித்த அறிக்கையை உருவாக்கியுள்ளது.
இந்த அறிக்கையில், “அனுமதிக்கப்பட்ட அளவுகளைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகமாக மாசடைந்த காற்றை, பெருநகரங்களில் வாழும் மக்களில் பத்தில் ஒன்பது பேர் சுவாசிக்கின்றனர். குறிப்பாக ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.