Home உலகம் இலங்கையில் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைய வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

இலங்கையில் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைய வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

772
0
SHARE
Ad

douglas-devanandaகொழும்பு, மே 14 – இலங்கை தமிழ் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசு ஞாயமான முறையில் தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:–

“பலரது தூற்றுதல்களுக்கு மத்தியில் நான் தொடர்ந்து அமைச்சராக இருப்பது எனது தமிழ் மக்களுக்காக தான். எனது சாணக்கிய தந்திரம் மற்றும் மதி நுட்பம் மூலம் தமிழர்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறேன். எனது வழிமுறை மூலம் அனைத்து உரிமைகளையும் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உள்நாட்டில் உள்ள அனைத்து தமிழ் கட்சி தலைமைகளும் இணைய வேண்டும்.”

#TamilSchoolmychoice

“அவ்வாறு செய்யாத வரை சர்வதேச அழுத்தங்கள் தமிழர்களுக்கு ஒரு போதும் எந்த தீர்வையும் பெற்றுத் தராது. நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விஷயத்தில் அரசாங்கம் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளத்  தவறினால் அரசில் தொடர்ந்து அங்கம் வகிப்பது குறித்து மறுபரிசீலினை செய்யத் தயாராக இருக்கிறேன். எனவே, நாடாளுமன்றத் தேர்வு குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகிக்க முன்வர வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.