Home கலை உலகம் திட்டமிட்டபடி 23-இல் “கோச்சடையான்’ வெளியீடு!

திட்டமிட்டபடி 23-இல் “கோச்சடையான்’ வெளியீடு!

541
0
SHARE
Ad

rajini1சென்னை, மே 14 – ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கோச்சடையான்’ திரைப்படம் திட்டமிட்டபடி மே 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பங்களில் கடந்த 9-ஆம் தேதி “கோச்சடையான்’ வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து மே 23-ஆம் தேதி “கோச்சடையான்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதை படத் தயாரித்துள்ள ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தொழில் நுட்பக் காரணங்களால் மட்டுமே “கோச்சடையான்’ படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்ந்ததால் மே 23-ஆம் தேதி திட்டமிட்டபடி படம் வெளியாகும் என கூறியுள்ளது.