ஜெருசேலம், மே 14 – இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுத் ஒல்மெர்ட்டுக்கு (68) ஊழல் வழக்கில் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
இஸ்ரேல் வரலாற்றில் முதல் முறையாக ஊழல் வழக்கில் தண்டிக்கப்படும் முதல் உயர்நிலைத் தலைவர் எஹுத் ஒல்மெர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெருசலேம் நகரில் மேயராக இருந்தபோது ஹோலி லேண்ட் குடியிருப்புத் திட்டத்துக்காக எஹுத் ஒல்மெர்ட் சுமார் ரூ.95 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதி டேவிட் ரோசன், “”ஒல்மெர்ட் மற்றும் ஊழலில் தொடர்புடைய இதர அதிகாரிகளின் இந்தக் குற்றம் தேசத்துரோகத்துக்கு இணையானது” என்றார். ஏரியல் ஷரோனை அடுத்து 2006-இல் இஸ்ரேல் பிரதமரான ஒல்மெர்ட் 2008-இல் இராஜினாமா செய்தார்.