Home உலகம் ஒபாமாவைக் கொல்லத் திட்டமிட்டவருக்கு மரணதண்டனை!

ஒபாமாவைக் கொல்லத் திட்டமிட்டவருக்கு மரணதண்டனை!

588
0
SHARE
Ad

obamaஸூஃபால்ஸ், மே 16 – அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கொல்லத் திட்டமிட்ட நபருக்கு மரணதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் மெக்வே (44) என்ற மனநிலை சரியில்லாத நபர், கடந்த 2011-ஆம் ஆண்டு மேபெல்ஷீன் (75) என்ற பெண்னைக் கொலை செய்து விட்டு, அவரது காரை திருடிக்கொண்டு அதிபர் ஒபாமாவைக் கொல்வதற்காக வாஷிங்டன் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

தப்பியோடிய அவரை, அமெரிக்ககாவல் துறையினர் மேடிசன் என்ற இடத்தில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு தெற்குட கோடாமாகாண நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையின் போது, நீதிபதிகள் குழு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் குழுவில் ஒருமித்த கருத்து எழாமல் இருந்திருந்தால் மெக்வேக்கு ஜாமீனில் வெளிவர முடியாத ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice