Home உலகம் உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேசிலுக்கு 37 லட்சம் பேர் வருவர்!

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேசிலுக்கு 37 லட்சம் பேர் வருவர்!

599
0
SHARE
Ad

brazil-worldcup-2014-300x165பிரேசில், மே 16 – அடுத்த மாதம் பிரேசிலில் துவங்கவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை முன்னிட்டு ஏறத்தாழ 37 லட்சம் பேர் அந்த நாட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயர்வை காணும் என்பதோடு ஏறத்தாழ 3 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய செலவாணி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கால்பந்து விளையாட்டைக் காண நேரடியாக வருபவர்களின் எண்ணிக்கை 19 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவர்கள் நேரடியாக ஏறத்தாழ 1.83 பில்லியன் அமெரிக்க டாலரை செலவழிப்பார்கள்.

#TamilSchoolmychoice

மேலும் 18 லட்சம் பயணிகள் உலகக் கிண்ண கால்பந்து போட்டிபை முன்னிட்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருகை தருவார்கள். அவர்கள் ஏறத்தாழ 1.19 பில்லியன் அமெரிக்க டாலரை செலவழிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தவிர மேலும் பல வகைகளில் சுற்றுப் பயணத் துறை மேம்பாடு காணும் என்பதோடு உலக்கிண்ண கால்பந்து தொடர்பான அந்நிய செலவாணி வருமானங்களும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து மட்டும் 3 லட்சம் பயணிகள் கால்பந்து விளையாட்டுகளை காண வருவதோடு மிக அதிகமாக செலவு செய்வார்கள் என்றும் மதிப்பீடுகள் காட்டுகின்றன. இந்த பிரபல கணக்கெடுப்புகள் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான நுழைவு சீட்டு விற்பனை முடிவுகளை வைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலக் கிண்ண கால்பந்து போட்டிகளால் பிரேசிலுக்கு ஏற்பட போகும் புகழும் பிரபல்யமும் இந்த வெளிநாட்டு பயணிகள் தொடர்ந்து மீண்டும் பிரேசிலுக்கு திரும்ப வழிவகுக்கும். அத்துடன் பிரேசில் நாட்டை இதுவரை காணாதவர்கள் ஒரு முறை அந்த நாட்டிற்கு வருகை தர வேண்டும் என்ற ஆர்வத்தையும் மற்ற உலக நாட்டு மக்களுக்கு இந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ஏற்படுத்தும்.