Home India Elections 2014 பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி!

பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி!

769
0
SHARE
Ad

PONசென்னை, மே 16 – தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே பாஜக வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் காத்துக் கொண்டிருப்பதாக பாஜக கட்சி கூறுகிறது.

தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக என இரண்டாம் கட்டத்திலுள்ள அரசியல் கட்சிகளை இணைந்து வானவில் கூட்டணி அமைத்ததில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பெரும் பங்கு உள்ளது. இதற்கு பரிசாக இவருக்கு கன்னியாகுமரி தொகுதியை ஒதுக்கியது பாஜக.

தமிழகத்தில் பாஜக தீண்டத்தகாத கட்சி போலவே பார்க்கப்படும் நிலையிலும், தென் கோடி கன்னியாகுமரியில் அக்கட்சியை வெற்றி பெறச்செய்த ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி காத்திருப்பதாக கூறுகிறார்கள் பாஜகவினர்.

#TamilSchoolmychoice