Home India Elections 2014 ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வெற்றி- ஸ்மிருதி ராணி தோல்வி

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வெற்றி- ஸ்மிருதி ராணி தோல்வி

613
0
SHARE
Ad

smriti-rahul_650_040114012657அமேதி, மே 16 – காங்கிரஸ் கட்சியின் உதவித் தலைவரான ராகுல் காந்தி தான் போட்டியிட்ட அமேதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி ராணி தோல்வி அடைந்தாலும் அகில உலகத்தின் கவனத்தையும் ஈர்த்த தொகுதியில் போட்டியிட்டதன் வழி உலகப் புகழ் அடைந்து விட்டார்.

அதன் மூலம் பாஜகவில் இனிவரும் காலங்களில் முக்கிய தலைவராக உயர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

காங்கிரசின் முகமாக வர்ணிக்கப்பட்ட ராகுல் காந்தியால்தான் காங்கிரஸ் இந்த அளவுக்கு மோசமாகத் தோல்வியடைந்தது என்று கூறப்பட்டாலும், அவர் மட்டும் தனது பாரம்பரிய தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.