Home நாடு பிகேஆர் தேர்தல் குளறுபடிகளுக்கு வெளியாட்கள் தான் காரணம் – அன்வார்

பிகேஆர் தேர்தல் குளறுபடிகளுக்கு வெளியாட்கள் தான் காரணம் – அன்வார்

498
0
SHARE
Ad

Anwar-Ibrahim-Konvensyen-Days-Saing-Komoditi-01கோலாலம்பூர், மே 17 – கடந்த வாரம் நடைபெற்ற பிகேஆர் உட்கட்சித் தேர்தல்களில் குளறுபடிகள் நடந்ததற்கு புதிய உறுப்பினர்களும் வெளியாட்களுமே காரணம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

வாக்களிப்பு மையங்களில் உள் புகுந்து வாக்குப் பெட்டிகளை எடுத்துக் கொண்டதும், கட்சியினரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் வெளியாட்கள் தான் என்று வீடியோ, புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

கட்சியின் பெயரைக் கெடுப்பதற்காக சில விஷமிகள் இவ்வாறு நடந்து கொண்டது வேதனையளிப்பதாகவும் இதற்கு புதிய உறுப்பினர்களும் உடைந்தையாக இருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே சிலாங்கூரில் 10 தொகுதிகளில் காலவரம்பின்றி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யார் இதற்கு தூண்டுதலாக இருந்தார்கள் என்பதை விரைவில் கண்டுபிடிப்பேன் என்றார். மேலும் கட்சியின் விதிமுறைகளை மீறிய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசமாக கூறினார்.