Home வணிகம்/தொழில் நுட்பம் சீனாவில் விண்டோஸ் 8 -க்கு தடை! விற்பனையில் கடும் வீழ்ச்சி!

சீனாவில் விண்டோஸ் 8 -க்கு தடை! விற்பனையில் கடும் வீழ்ச்சி!

511
0
SHARE
Ad

Windows-8மே 21 – சீனாவில் அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறைகளில் விண்டோஸ் 8-ஐ பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மைக்ரோஃசாப்ட், விண்டோஸ் 8 விற்பனையில் வீழ்ச்சியை சந்திக்க உள்ளது.

இந்த தடை குறித்து மத்திய அரசு கொள்முதல் மையம் தங்கள் இணைய தளங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், “அரசுத் துறைகளில் விண்டோஸ் 8 பயன்பாடு தடை செய்யப்படுகின்றது. மேலும், அதற்கு பதிலாக ஆற்றல் சேமிக்கும் தயாரிப்புகள் பயன்படுத்தப்படும்” என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்த தடையின் மூலம் ஆற்றல் சேமிப்பு எவ்வாறு நடைபெறும் என எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஏற்கனவே, பைரசி காரணமாக சீனாவில் மைக்ரோஃசாப்ட்-ன் மென்பொருள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தடை மேலும் சிக்கலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

சீனாவில் பெரும்பாலான பொதுத் துறைகளில் விண்டோஸ் எக்ஸ்பியே அதிகம் புழக்கத்தில் உள்ளது. ஆனால் மைக்ரோஃசாப்ட் கடந்த மாதம், எக்ஸ்பி உருவாக்கத்தினை நிறுத்தியதால், விண்டோஸ் 8-க்கு தடையை பிறப்பிப்பதன் மூலம், அந்நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என சீனா திட்டமிட்டிருப்பதாக தொழில்நுட்ப நிறுவனம் கனாலிஸ் தெரிவித்துள்ளது.