Home உலகம் ஐ.நா உச்ச மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு பான் கி மூன் அழைப்பு!

ஐ.நா உச்ச மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு பான் கி மூன் அழைப்பு!

488
0
SHARE
Ad

ban ki moonநியூயார்க், மே 21 – இந்தியப் பிரதமராக விரைவில் பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி, ஐ.நா. சபையில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான உச்ச மாநாட்டில் பங்கேற்க விரைவில் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “ஐ.நா. சபையின் கூட்டத்திற்கு, குறிப்பாக, பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவின் நரேந்திர மோடி, அமெரிக்காவிற்கு வருகை தருவார் என்று மிகவும் நம்புகிறோம்.”

“பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறும் உச்சி மாநாட்டின்போது அவரைக் காண ஆவலாக இருக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து இருந்தது. இந்நிலையில் உலகின் பெரிய தலைவரான பான் கி மூன் சார்பில் அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.