Home இந்தியா சென்னையில் லேசான நில அதிர்வு! பொதுமக்கள் அச்சம்!

சென்னையில் லேசான நில அதிர்வு! பொதுமக்கள் அச்சம்!

606
0
SHARE
Ad

earthquakeசென்னை, மே 22 – ஒடிஸாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில், வங்கக் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று இரவு 9.52 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலி இந்தியாவின் டில்லி,கொல்கத்தா, ராஞ்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் காணப்பட்டது.

சென்னையில் போரூர், அடையாறு, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, திருவான்மியூர் எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. சில விநாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் சில இடங்களில் வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. அச்சமடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice