Home கலை உலகம் மான்கராத்தே 50-வது நாள் பரிசு – நீதிமன்றப் படியேறுகிறார் சிவகார்த்திகேயன்!

மான்கராத்தே 50-வது நாள் பரிசு – நீதிமன்றப் படியேறுகிறார் சிவகார்த்திகேயன்!

741
0
SHARE
Ad

Sivakarthikeyanசென்னை, மே 22 – சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான்கராத்தே படம் பரவலான வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. நாளை (மே 23)  மான்கராத்தே படம் 50-வது நாளை தொடுகிறது. இந்த நிலையில் மான்கராத்தே 50-வது நாள் பரிசாக சிவகார்த்திகேயன் நீதிமன்றப் படியேறும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் குத்துச் சண்டை போட்டிகளில் பல பதக்கங்களை பெற்றிருக்கிறேன். விதிமுறைகள், மரபுகளை பின்பற்றித்தான் குத்துச் சண்டை போட்டிகள் நடக்கிறது.

அண்மையில் வெளியான மான்கராத்தே என்ற படத்தில் கவுரவமிக்க குத்துச் சண்டை போட்டியை கேலி செய்திருக்கிறார்கள். போட்டியில் ஜெயிக்க உன் காதலியை அனுப்பு என்று ஒரு குத்துச் சண்டை வீரன் கேட்கிறான். இன்னொருவன் வெற்றிக்காக ஒருவன் காலில் விழுந்து அழுகிறான்.

#TamilSchoolmychoice

இது குத்துச் சண்டை வீரர்களை இழிவுபடுத்துவதாகும்.எனவே தயாரிப்பாளர், கதை எழுதிய ஏ.ஆர்.முருகதாஸ், நடித்த சிவகார்த்திகேயன், வம்சி, இயக்கிய திருகுமரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி வருகிற 30-ஆம் தேதி சம்பந்தப்பட்டவர்களான ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன், வம்சி, திருக்குமரன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.