Home இந்தியா நரேந்திர மோடி பதவியேற்பு விழா: ராஜபக்சே பங்கேற்பது உறுதி!  

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: ராஜபக்சே பங்கேற்பது உறுதி!  

552
0
SHARE
Ad

sl_president_22092013_0புதுடெல்லி, மே 22 – இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேதலில் பா.ஜ.க.பெரும் வெற்றி பெற்று, எதிர்வரும் 26-ம் தேதி, நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்க இருக்கிறார். இதன் விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்‌சே பங்கேற்பார் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளுமாறு, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் வருமாறு அழைப்பு விடுத்தார்.   அதேபோல்,  இலங்கை அதிபர் ராஜபக்சேவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த விழாவில் ராஜபக்‌சே பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியியன.

#TamilSchoolmychoice

தற்போது, இலங்கை அதிபர் ராஜபக்‌சே மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என இலங்கை அரசு உறுதிபடுத்தியுள்ளது. ராஜபக்சேவின், இந்திய வருகை தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது.