Home உலகம் ராஜபக்‌சே – சிறிசேனா சந்திப்பு அடுத்த வாரம் தள்ளிவைப்பு!

ராஜபக்‌சே – சிறிசேனா சந்திப்பு அடுத்த வாரம் தள்ளிவைப்பு!

511
0
SHARE
Ad

rajapakse2கொழும்பு, ஏப்ரல் 24 – அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்‌சேவும் நாளை சனிக்கிழமை கொழும்பில் சந்திப்பு நடப்பதாக இருந்தது.

ஆனால் அச்சந்திப்பு அடுத்த வாரத்திலயே இடம்பெறும் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் அரசியல் சர்ச்சைகள் குறித்து இருவரும் நாளை கொழும்பில் உள்ள பொது இடம் ஒன்றில் சந்தித்துப் பேசுவர் எனத் தெரவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இந்த சந்திப்பு நாளை இடம்பெறாது என்றும் அடுத்த வாரமே இடம்பெறும் என்றும் முன்னாள் அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.