Home நாடு இடைத்தேர்தலில் பாஸ் ஆதரவு கிடைக்கும் – அஸ்மின் அலி நம்பிக்கை

இடைத்தேர்தலில் பாஸ் ஆதரவு கிடைக்கும் – அஸ்மின் அலி நம்பிக்கை

442
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 24 – ஹூடுட் விவகாரம் தொடர்பாக உரசல் ஏற்பட்டுள்ள போதிலும், பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பாஸ் கட்சியின் ஆதரவு கிடைக்கும் என பிகேஆர் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Azmin Ali

பக்காத்தான் கூட்டணியில் நிலவும் பிரச்சினைகளுக்கு குடும்ப மனப்போக்குடன் தீர்வு காணப்படும் என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார்.

#TamilSchoolmychoice

“வெற்றியின் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே பக்காத்தானின் முக்கிய குறிக்கோள். ஒரு மாற்றத்திற்காகவே வாக்களிக்கிறோம் என்று வாக்காளர்களை நாம் ஏற்கச் செய்ய வேண்டும்.

“பக்காத்தானில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு எனும் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருங்கால வெற்றிகளை உறுதி செய்ய வேண்டும்,” என்று சிலாங்கூர் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஹூடுட் தொடர்பான தங்களது நிலைப்பாட்டிற்காக, பிகேஆர் தலைவர்கள் பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு முன் மன்னிப்பு கூற வேண்டும் என அத்தொகுதி பாஸ் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

இல்லையேல் இடைத்தேர்தலில் பிகேஆர் வேட்பாளரை ஆதரிக்கப் போவதில்லை என்றும் பெர்மாத்தாங் பாவ் பாஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.