Home கலை உலகம் ஐஸ்வர்யா ராய் நடித்த சர்ச்சைக்குரிய நகைக்கடை விளம்பரம் திரும்பப்பெறப்பட்டது!

ஐஸ்வர்யா ராய் நடித்த சர்ச்சைக்குரிய நகைக்கடை விளம்பரம் திரும்பப்பெறப்பட்டது!

535
0
SHARE
Ad

aish1_650_042215073415புதுடெல்லி, ஏப்ரல் 24 – பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்து சர்ச்சைக்குள்ளான புதிய நகைக்கடை விளம்பரம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை தி.நகர் பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்று திறக்கபட்டது.

இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஐஸ்வர்யா ராய் உள்ளார். இந்த நகைக்கடை தொடர்பான விளம்பரம் இனவெறியை வெளிப்படுத்துவதாகவும், சிறார் அடிமைத்தனத்தை ஆதரிப்பதாகவும் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பரா நக்வி, நிஷா அகர்வால், எனாக்ஷி கங்குலி, பார்தி அலி, மிருதுளா பஜாஜ் உள்ளிட்டோர் ஐஸ்வர்யா நடித்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கடிதம் எழுதினர்.சர்ச்சைக்குரிய விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு கருப்பு நிற சிறுவன் ஒருவன் குடை பிடித்து நிற்பது போல உள்ளது.

#TamilSchoolmychoice

ei-243939இது தொடர்பாக ஐஸ்வர்யா ராய் தரப்பிலும், எடுக்கப்பட்ட படத்திற்கு வெளிவதுள்ள படத்திற்கும் இடையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே தாமும் இதில் நடவடிக்கை எடுப்பதாக பதில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நகைக்கடை நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் அந்த விளம்பரத்தை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளனர்.