Home இந்தியா மனித வாழ்க்கையை விட முக்கியமானது ஏதுமில்லை – விவசாயி தற்கொலை குறித்து மோடி!

மனித வாழ்க்கையை விட முக்கியமானது ஏதுமில்லை – விவசாயி தற்கொலை குறித்து மோடி!

585
0
SHARE
Ad

modi-speech9-600-jpgபுதுடெல்லி, ஏப்ரல் 24 – டெல்லியில் நேற்று முன்தினம் ஆம் ஆத்மி சார்பில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மரத்தில் ஏறி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வு அலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இதுகுறித்து மோடி கூறியதாவது; “பல ஆண்டுகளாக தொடரும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் கவலை அளிக்கக்கூடிய விஷயம். இதற்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து விவாதித்து தீர்வு காண வேண்டும்”.

#TamilSchoolmychoice

“இந்தப் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு காண நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். மனித வாழ்க்கையை விட முக்கியமானது எதுவுமில்லை” என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

நாடாளுமன்ற அவையில் நேற்று காலையில் விவசாயி தற்கொலை பிரச்சனையை எழுப்பிய எதிர்க்கட்சிகள், முக்கிய பிரச்சனை குறித்து விவாதிக்கும்போது அவையில் பிரதமர் இல்லாதது குறித்து குறைகூறின. பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தபிறகு பிரதமர் மோடி பேசினார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற அவையில் அறிக்கை தாக்கல் செய்து பேசியபோது,

“பேரணியில் பங்கேற்ற விவசாயி மரத்தில் ஏறி தற்கொலை செய்தபோது, அவரை தடுக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபடவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் மீது டெல்லி போலீஸ் கூறிய குற்றச்சாட்டை ஆதரித்து பேசினார்.

போலீசார் தீயணைப்பு படை வீரர்களை பெரிய ஏணி எடுத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டனர். அவர்கள் வந்து மீட்பதற்குள் மரத்தில் விவசாயி தனது துண்டால் தூக்கிட்டுக் கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தனது பதிலில் தெரிவித்தார்.

விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை பாரபட்சமின்றி இருக்காது ஏனெனில், இந்த விஷயத்தில் போலீசார் தவறு செய்துள்ளனர்.

எனவே நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேட்டுக் கொண்டார்.

நேற்று காலையில், விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக ராஜ்நாத் சிங் உள்பட சில மூத்த அமைச்சர்கள் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினர்.

விவசாயி தற்கொலை சம்பவம் நேற்று காலையில் மாநிலங்களவையில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தியதால் அவை நடவடிக்கைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.