Home கலை உலகம் கார் விபத்து: நடிகர் நாசரின் மகன் படுகாயம் – மூன்று பேர் பலி!

கார் விபத்து: நடிகர் நாசரின் மகன் படுகாயம் – மூன்று பேர் பலி!

614
0
SHARE
Ad

22-car-accident-nasser-son-600சென்னை, மே 22 – நடிகர் நாசரின் மகன் ஃபைசல் இன்று நிகழ்ந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். அவருடன் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

நடிகர் நாசரின் மகன் ஃபைசல் இன்று காலை தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் மகாபலிபுரம், மணமை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

22-car-accident12-600

#TamilSchoolmychoice

இவ்விபத்தில் காரில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஃபைசல் மற்றும் அவரது நண்பர் ஒருவர் படுகாயம் அடைந்தனர். இதில் ஃபைசல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் கிடைத்த உடன் நாசர் தனது மனைவி கமீலாவுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். ஃபைசல் நாசரின் மூத்த மகனாவார். இவர், விரைவில் வெளிவர இருக்கும் சைவம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.