Home வணிகம்/தொழில் நுட்பம் புரோட்டோன் ஹோல்டிங்ஸ் தலைவராக மகாதீர் நியமனம்!

புரோட்டோன் ஹோல்டிங்ஸ் தலைவராக மகாதீர் நியமனம்!

655
0
SHARE
Ad

Tun-Dr.-Mahathir-Mohamad1கோலாலம்பூர், மே 22 – மலேசிய கார் தயாரிப்பு நிறுவனமும் அரசுடமை நிறுவனமுமான  புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவராக தான் நியமிக்கப்பட்டுள்ளதை முன்னாள் மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

தற்போது நிர்வாகத் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ முகமட் கமில் ஜமில் என்பவருக்கு பதிலாக துன் மகாதீர் இந்தப் பொறுப்பை ஏற்கின்றார்.

“இந்தத் தலைவர் பொறுப்பு நிர்வாக அதிகாரமற்ற பொறுப்பாகும். நான் புரோட்டோன் நிறுவனத்திற்கான திட்டங்களை வைத்துள்ளேன். அதனை ஒரு வெற்றிகரமான நிறுவனமாக மாற்றிக் காட்டுவேன்” என்று மகாதீர் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பிரதமராக இருந்த காலத்தில் 1983ஆம் ஆண்டில் மலேசியாவும் கார் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் மகாதீரால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் புரோட்டான் ஆகும்.

பின்னர் பிரதமர் பதவியை துறந்தப் பின்னர் 2003 ஆம் ஆண்டில் அதன் ஆலோசகராக மகாதீர் நியமிக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டில் டிஆர்பி ஹைகோம் பெர்ஹாட் அரசாங்கத்தின் கஜானா நேஷனல் நிறுவனம் வைத்திருந்த புரோட்டோன் நிறுவன பங்குகளை வாங்கியது.

கடந்த 5 ஆண்டுகளாக டிஆர்பி ஹைகோம் பெர்ஹாட்டின் பெரோடுவா நிறுவனம் தனது செலவினங்களை குறைத்துக் கொண்டதன் மூலமாக அதே வேளையில் தரமான கார்களை உற்பத்தி செய்ததன் காரணமாக கார் சந்தையில் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டு வந்தது.

ஆனால், புரோட்டோன் நிறுவனமும் கடந்த 18 மாதங்களாக கார் சந்தையில் தனது பங்கினை கட்டங்கட்டமாக நகர்த்தி வந்து கொண்டிருக்கின்றது.

வெளிநாட்டுக் கார்களின் விற்பனை உயர்வால் தனது சந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் புரோட்டோன் புதிய ரக வடிவமைப்பு கார்களை உற்பத்தி செய்ய அரசாங்கத்திடம் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி இருந்தது.

இச்சூழ்நிலையில் நிறுவனத்திற்கு தலைவராகப் பொறுப்பேற்கும் மகாதீரின் கண்காணிப்பில் இனி புரோட்டோன் இயங்கும்.