Home வணிகம்/தொழில் நுட்பம் விமான நிறுவனங்களுக்கு இடையில் கட்டணக் குறைப்பு போட்டி!

விமான நிறுவனங்களுக்கு இடையில் கட்டணக் குறைப்பு போட்டி!

434
0
SHARE
Ad

missing-malaysian-airlines-flight-terror-strike-probeகோலாலம்பூர், மே 23 – MH370 விமானம் காணாமல் போனதையடுத்து மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் மலேசிய விமானப் போக்குவரத்து துறையையும், சுற்றுலாத் துறையையும் மீண்டும் உயிர்ப்பிக்கும் வண்ணம் மலேசியாவின் முக்கிய விமான நிறுவனங்கள் போட்டியில் இறங்கியுள்ளன.

அந்தப் போட்டிகளின் முதல் கட்டமாக கட்டணங்களை விலை குறைக்கும் நடவடிக்கையில் அவை இறங்கிருக்கின்றன. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் லண்டன், சிட்னி, சென்னை, ஒசாகா, கிராபி போன்ற நகர்களுக்கு தனது கட்டணத்தை பாதியாக குறைத்துள்ளது. ஏறத்தாழ 2700 மலேசிய வெள்ளி கட்டண விலையில் தற்போது மாஸ் விமானத்தில் லண்டன் சென்று திரும்பலாம்.

ஜெர்மனியின் பிராங்பெட் நகருக்கு சென்று திரும்பும் கட்டணம் 2800 வெள்ளி தான். அதோபோன்று இந்திய நகரங்களுக்கான கட்டணங்களும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஏர்ஆசியா-எக்ஸ் நிறுவனம் தனது 18 பயண இலக்குகளுக்கான கட்டண விலையை 60 சதவீதம் வரை குறைத்துள்ளது. ஆஸ்திரேலியா நகர்கள், தோக்கியோ, கொழும்பு, கொரியா, சீனா ஆகிய பகுதிகளுக்கான கட்டணங்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

தற்போது பெர்த் நகருக்கான ஏர்ஆசியா-எக்ஸ் நிறுவனத்தின் ஒரு வழிப்பாதை வெறும் 200 வெள்ளிதான். இந்த விலைக் குறைப்புகளின் மூலம் மலேசிய  விமான நிறுவனஙகளின் சேவை மீது பயணிகளின் ஆர்வமும் ஈடுபாடும் மீண்டும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.