Home நாடு தாமஸ் கிண்ணத்தை ஜப்பான் வென்றது

தாமஸ் கிண்ணத்தை ஜப்பான் வென்றது

491
0
SHARE
Ad

Thomas CupPபுதுடில்லி, மே 25 – இன்று நடைபெற்ற தாமஸ் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஜப்பான் 3-2 எண்ணிக்கையில் மலேசியாவை வெற்றி கொண்டது.

முதல் ஆட்டத்தில் மலேசியா வெற்றி பெற, இரண்டாவதாக நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் ஜப்பான் வென்றது.

மூன்றாவது ஒற்றையர் ஆட்டத்தில் மீண்டும் ஜப்பான் வென்றது.

#TamilSchoolmychoice

ஆனால் அடுத்த இரட்டையர் ஆட்டத்தில் மலேசியா வெற்றி பெற்றதை அடுத்து இரண்டு நாடுகளும் 2-2 என்ற நிலையில் சரி சமமாக இருந்தன.

ஆனால் இறுதி ஒற்றையர் ஆட்டத்தில் ஜப்பான் வென்றதை அடுத்து தாமஸ் கிண்ணத்தை ஜப்பான் வெற்றி கொண்டது.