Home உலகம் ஒபாமாவுக்கு எதிர்ப்பு! வெள்ளை மாளிகை முன் நிர்வாணப் போராட்டம்!

ஒபாமாவுக்கு எதிர்ப்பு! வெள்ளை மாளிகை முன் நிர்வாணப் போராட்டம்!

527
0
SHARE
Ad

வாஷிங்டன், மே 26 – அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன்பாக அதிபர் பராக் ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் நிர்வாணப் போராட்டம் நடத்தினார். இதனால், சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் கோடை வெயில் அதிகரித்துள்ளது. பகலில் வெப்பம் 26 டிகிரி செல்சியஸ் காணப்படுகிறது. இது இந்தியாவைப் பொறுத்த அளவில் குறைவு என்றாலும் அமெரிக்கர்களால் இதை பொறுத்துக் கொள்ள முடியாது.

இந்நிலையில் கொளுத்தும் வெயிலில் நேற்று முன்தினம் ஆசாமி ஒருவர், வாஷிங்டன் நகரில் அமைந்திருக்கும் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பு வந்தார். அப்போது அவர் தான் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து கீழே போட்டார்.

#TamilSchoolmychoice

அதிபர் ஒபாமாவுக்கு எதிராக கோஷம் போட்டார். உடனடியாக சாலையில் சென்ற பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஒரு சிலர் அவரை கைபேசியில் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யாரும் படம் எடுக்க முடியாதபடி அவரை சுற்றி வளைத்தனர்.

அப்போது வெள்ளை மாளிகையின் உள்ளே அதிபர் ஒபாமா, வீட்டு வசதி வாரிய செயலாளர் நியமனம் தொடர்பான உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். இந்த சம்பவத்தால் வெள்ளை மாளிகை முன்பு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவரது பெயர் மைக்கேல் பெக்கார்ட் என்பது தெரிந்தது.

போலீசார் வற்புறுத்தியும் ஆடைகளை அணிய மறுத்ததால் மைக்கேல் பெக்கார்ட்டை அப்படியே சுற்றி வளைத்து வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போராட்டம் நடத்தியது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.