Home உலகம் ஆப்கனில் தேர்தல் முறைகேடு: ஐயாயிரம் அதிகாரிகள் நீக்கம்!  

ஆப்கனில் தேர்தல் முறைகேடு: ஐயாயிரம் அதிகாரிகள் நீக்கம்!  

463
0
SHARE
Ad

election-nuristani-05-25காபூல், மே 28  – ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவின் போது மோசடி வேலைகளில் ஈடுபட்டார்கள் என்று குற்றம்சாட்டி, தேர்தல் ஆணைய ஊழியர்கள் ஐயாயிரம் பேரை, அந்நாட்டு தேர்தல் ஆணையம் பதவிநீக்கம் செய்துள்ளது.

7 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்த ஆப்கன் தேர்தலின் முதல் சுற்று முடிவில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அப்துல்லா முன்னணி வகித்தார். ஆனால் இதனை எதிர்த்த, போட்டி வேட்பாளர்களான அஷ்ரப்கானி அகமதுஷாய் மற்றும் ஷல்மை ரஸ்சூல் ஆகியோர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகி உள்ளது. வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிகளுக்கு பொறுப்பு வகித்த பெரும்பான்மையான அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தலைவரான யூஸஃப் நூரிஸ்தானி கூறுகையில், “ஜூன் 14-ம் தேதி நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில், நீக்கப்பட்ட அதிகாரிகள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீதான விசாரணை தொடரும்” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த தேர்தலில் காவல்துறை மூத்த அதிகாரிகள் சிலரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதால் அவர்களும் பதவி நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகின்றது.